அண்மையில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற “வியன்களம்” கவிதை நூல் மற்றும் “கொற்றவை” இசைத்தட்டு அறிமுக நிகழ்வு…..
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநகரில் பவித்திராவின் “வியன்களம்” எனும் போர்க்கால கவிதை நூல் மற்றும் “கொற்றவை” பாடல் இறுவட்டு அறிமுக நிகழ்வு 23.06.2024 (ஞாயிற்றுக்கிழமை)
அன்று பிற்பகல் 15.30 மணியளவில் தொடங்கியது.
இந்நிகழ்விற்கு நூலாசிரியரும்,பாடலாசிரியருமான
திருமதி பவானி தர்மகுலசிங்கம் அவர்கள் கனடாவிலிருந்து வருகை தந்திருந்தார்.
திருமதி எழிலினி மிதுலன் அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் தொடங்கின. ….
இந் நிகழ்வின் வரவேற்புச் சுடரினை நூலாசிரியர் மதிப்பார்ந்த திருமதி பவானி தர்மகுலசிங்கம் அவர்களும்,
“அன்பேசிவம்”தொண்டமைப்பின் தலைவர் திரு. திருநாவுக்கரசு திருநாமசிங்கம் அவர்களும் ஏற்றினர்….
விழாச்சுடரினை
சூரிச் சிவன் ஆலய பிரதமகுரு வணக்கத்துக்குரிய
கைலைவாமதேவ கைலாசநாத குருக்கள் அவர்களும்,
நிதர்சனப் பிரிவைச்சேர்ந்த
திருமதி அமலா சேரலாதன் அவர்களும்,
மூத்த படைப்பாளிகளுள் ஒருவரான திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களும்,
சூரிச் சிவன் ஆலய தலைவர் திரு.இராதாகிருஷ்ணன் அவர்களும்,
நிதர்சனப் பிரிவைச்சேர்ந்த
பூமா அவர்களும், ஜேர்மனியிலிருந்து வருகைதந்த நூலாசிரியரின் சகோதரன் திரு.நவக்குமார் அவர்களும்,
யோகா ஆசிரியர் திரு.சிவம் அவர்களும்,
படைப்பாளி திரு.அன்ரன் பொன்ராசா,
படைப்பாளி திரு.அமரதாஸ் அவர்களும் ஏற்றி வைத்தனர்.
அகவணக்கத்தினைத் தொடர்ந்து
இறைவணக்கப் பாடல்
திருமதி பப்பி சுபா அவர்களாலும், மாவீரர் பாடல்
இளைய பாடகர் திரு. ஜனேந்திரன் அவர்களாலும் இசைக்கப்பட்டன. சூரிச் சிவன் ஆலய பிரதமகுரு வணக்கத்துக்குரிய கைலைவாமதேவ கைலாசநாத குருக்கள் அவர்களின் ஆசியுரையுடன் நிகழ்வுகள் தொடர்ந்தன.
சூரிச் சிவன் ஆலயத்தின் செயலாளர் திரு. செல்லப்பா சிறிஸ்கந்தவேள் அவர்களின் வரவேற்புரையை அடுத்து,
திருமதி எழிலினி மிதுலன் அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது.
தொடர்ந்து நூலாசிரியரையும் அவரது நூல்கள், படைப்புகள் குறித்த அறிமுகவுரையினை
மூத்த படைப்பாளிகளுள் ஒருவரான திருமதி. ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் ஆற்றினார்.
தொடர்ந்து “கொற்றவை”
எனும் பெயர் தாங்கிய ஆறு பாடல்கள் உள்ளடங்கிய இசைத்தட்டு தொடர்பான மதிப்பீட்டுரையினை படைப்பாளியும் தமிழாசிரியையுமான திருமதி பிரேமினி அற்புதராசா
அவர்களும்,
“வியன்களம்” போர்க்கால கவிதைகள் நூல் தொடர்பான நயப்புரையினை படைப்பாளி து.திலக்(கிரி)அவர்களும் நிகழ்த்தினர்.
உரைகளைத் தொடர்ந்து முதன்மைப்பிரதிகள்,
சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன…
முதன்மைப் பிரதியினை
நிதர்சனப் பிரிவைச்சேர்ந்த திருமதி அமலா சேரலாதன் வழங்கி வைக்க பிரதிகள் முறையே
மூத்த படைப்பாளிகளுள் ஒருவரான திருமதி
ஆதிலட்சிமி சிவகுமார்,
நூலாசிரியர் திருமதி பவானி தர்மகுலசிங்கம்,
படைப்பாளி பிரேமினி அற்புதராசா,
”அன்பே சிவம்” தொண்டமைப்பின் தலைவர் திரு.திருநாவுக்கரசு திருநாமசிங்கம்,
படைப்பாளி திரு.து.திலக்(கிரி),ஊடகவியலாளர் திரு கனகரவி ஆகியோரும் வழங்கிவைத்தனர் . நூலின் பிரதிகளை
சூரிச் சிவன் ஆலய பிரதமகுரு வணக்கத்துக்குரிய கைலைவாமதேவ கைலாசாநாதக் குருக்கள்,சிவன் ஆலய தலைவர் திரு.சின்னராஜா இராதாகிருஷ்ணன்,தொழிலதிபர் திரு.பரராஜசிங்கம் இராதாகிருஷ்ணன்(லைவ் கொன்சுலாடிங்), தொழிலதிபர்
திரு.திருமதி கணேசலிங்கம் சசிகலா இணையர்(றகிசா இம்மோபிளின் ஆகே)
மற்றும் தொழிலதிபர்கள்,
வர்த்தகப்பிரமுகர்கள்,
பொது அமைப்பைச்சார்ந்தவர்கள்,
ஆலய நிர்வாகத்தினர்,
இலக்கிய கர்த்தாக்கள்,நூலாசிரியரின் உறவினர்கள்,ஊரவர்கள் எனப் பலரும் பெற்றுக்கொண்டு நிகழ்வைச் சிறப்பாக்கினர்.
அதனைத் தொடர்ந்து நூலினைப் பற்றியதும்,நூல் உருவாக்கத்தின் போது ஏற்பட்ட வலிகள் பற்றியும் நூலாசிரியர்
திருமதி பவானி தர்மகுலசிங்கம் ஏற்புரை வழங்கினார்…
தொடர்ந்து நூலாசிரியருகான மதிப்பளிப்பினை
திருமதி அமலா சேரலாதன் அவர்களும், திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களும் இணைந்து வழங்கினர். அதனையடுத்து நிகழ்விற்கு வருகைதந்து பங்களிப்புச் செய்த அத்தனை பற்றாளர்களுக்கும் திருமதி கல்யாணி ரஞ்சித் அவர்கள் கவிநயத்துடன்
நன்றியுரை வழங்கினார்.
நிகழ்வு சிறப்பான முறையில் இனிதே நிறைவுபெற்றது.

No comments:
Post a Comment