பொன்னாலையில் போதைப்பொருள் பாவனைக்கு உள்ளான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை மேற்கு சுழிபுரம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (29) மதியம் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கெலும் சஞ்சீவ ரூபசிங்க என்ற 28 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் அநுராதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் கடந்த ஆண்டு பொன்னாலை - சுழிபுரம் மேற்கில் திருமணம் செய்து அங்கு வசித்து வந்துள்ளதாகவும் , இவர் போதைக்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் ஏற்கனவே ஒருதடவை இவரை போதைப்பொருளை பயன்படுத்த வேண்டாம் என தடுத்தவேளை குழாய் மின்குமிளை (tube light) உட்கொண்டுள்ளார்.
இந்நிலையில், போதைப்பொருள் பாவிக்க வேண்டாம் என அறிவுறுத்தி தடுக்கப்பட்ட நிலையில், திங்கட்கிழமை (29) உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
மேலும், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment