அண்மைய செய்திகள்

recent
-

ஜெப்னா கிங்ஸ் அணிக்கு வெற்றி!

 LPL கிரிக்கெட் போட்டியில் இன்று (03) இடம்பெற்ற தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிக்கும் ஜெப்னா கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் ஜெப்னா கிங்ஸ் அணி  4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டி கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜெப்னா கிங்ஸ் அணி தம்புள்ளை அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்கியது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 191 ஓட்டங்கள் எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெப்னா கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றது.

தம்புள்ளை அணி சார்பாக குசல் பெரேரா 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றார்.



ஜெப்னா கிங்ஸ் அணிக்கு வெற்றி! Reviewed by Author on July 03, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.