சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு: கொழும்பு மாவட்டம் முதலிடம்
இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையான ஆறு மாத காலப்பகுதியில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 290 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இந்த முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
மாதாந்தம் இவ்வாறான பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும், சிறுவர்கள் தொடர்பான அதிகளவான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பெறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் தொடர்பான முறைப்பாடுகளில் இரண்டாவது அதிகளவான முறைப்பாடுகள் கம்பஹா மாவட்டத்திலிருந்தும் மூன்றாவதாக குருநாகல் மாவட்டத்திலிருந்தும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அண்மையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது மகளை பலாத்காரம் செய்ததாக ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில், அந்த சம்பவம் குறித்த விவாதத்தில் அவர் இந்த புள்ளிவிவரங்களை முன்வைத்தார்.
Reviewed by Author
on
July 29, 2024
Rating:


No comments:
Post a Comment