அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு கிழக்கில் உள்ள இளையோர் மீனவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கை எடுப்போம்- மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவிப்பு.

 வட-கிழக்கு இளையோர் மீனவ கூட்டு எனும் புதிய ஒரு அமைப்பு யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட சமூக மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.


குறித்த விடயம் தொடர்பாக அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை(28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,,,


 வட-கிழக்கு இளையோர் மீனவ கூட்டு எனும் புதிய அமைப்பு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(28) வடக்கு கிழக்கில் உள்ள இளம் மீனவர்களை அழைத்து யாழ்ப்பாணத்தில் கூட்டு கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்தோம்.


கிழக்கு மாகாணத்தில் இருந்து மட்டக்களப்பு, அம்பாரை,திருகோணமலை,   மற்றும் வட மாகாணத்தில் இருந்து யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு  மற்றும்  மன்னார்  ஆகிய  7 மாவட்டங்களில் இருந்தும் இளையோர் சமூகமளித்திருந்தனர்.


அனைவரையும் ஒன்றிணைத்து மிகவும் பெறுமதியான கூட்டு கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


அடுத்த கட்ட தலைமுறையினர் எவ்வாறு மீன் வளத்தினையும்,மீனவர்களின் உரிமைகளையும் அவர்களின்  பாதுகாப்பையும் மீனவ சொத்துக்களையும் முன்னெடுத்துச் செல்வது குறித்தும், அவர்கள் எவ்வாறு 2ஆம் கட்ட தலை முறையினராக இந்த உரிமைகளை தங்களில் உள்வாங்கி அதை முன்னெடுப்பதற்கு ஒரு ஆரம்ப செயல்பாடாக இக்கலந்துரையாடலில் இடம் பெற்றுள்ள தோடு கூட்டு நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.


யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வட கிழக்கை சேர்ந்த கரையோர மீனவர்கள் கலந்து கொண்டனர்.


இதன் போது எவ்வாறு கூட்டாக செயல்படுவது,தமது உரிமையை வென்றெடுப்பது,உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து கலந்துரையாட பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.











வடக்கு கிழக்கில் உள்ள இளையோர் மீனவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கை எடுப்போம்- மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவிப்பு. Reviewed by Author on July 28, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.