மன்னார்-முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு கிடைத்த சிறப்பு விருது.
வடக்கு மாகாண சுகாதாரத் துறையில் கடந்த 2023 ம் வருடத்திற்கான சுகவனிதையர் கிளினிக்கை மிக சிறப்பாக செய்து முடித்தமைக்கான மன்னார் மாவட்டத்தில் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு தெரிவு செய்யப்பட்டு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை முழுவதும் நடத்தப்பட்ட 'சுகவனிதையர்' கிளினிக் தெரிவில் வடமாகாணத்தில் முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மாத்திரம் மிகவும் சிறப்பாக செய்து முடித்துள்ள நிலையில் தெரிவாகியுள்ளது.
அதற்கான சான்றிதழும் நினைவுச் சின்னமும் கடந்த 16ம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சுகவனிதையர் கிளினிக்கை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஏனைய அலுவலர்களுக்கும் சிறப்பாக நடத்தி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Reviewed by Author
on
July 19, 2024
Rating:

.jpeg)
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment