அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடு பிரதேசத்தில் சிறப்பாக நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா

 தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தம்பனைக்குளம் கிராமத்தில்  கடந்த செய்வாய் மிகவும் சிறப்புற நடைபெற்றது.


இந்த நிகழ்வானது   மடு பிரதேச செயலாளர் கீ. பீட் நிஜாகரன் தலைமையில் வவுனியா - மன்னார் வீதியில் அமைந்துள்ள தம்பனைக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.


வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில், மடு பிரதேச செயலகம் இந்த விழாவை ஒழுங்கு செய்திருந்தது.


இந்த நிகழ்வில்  ஆடிப்பிறப்பு பண்டிகை யை அறிமுகம் செய்து வைத்து  யாழ்ப்பாணம் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் திருவுருவப் படத்திற்கு மடு பிரதேச செயலாளர் கீ. பீட் நிஜாகரன் மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.


தொடர்ந்து பொதுமக்கள் மலர் வணக்கம் செலுத்திய பின்  “ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை” என்ற பாடலை தம்பனைக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்கள் இசைத்தனர்.


 “ஆடிப்பிறப்பும் தமிழர் பாரம்பரியமும்” என்ற தலைப்பில் . அடுத்து மடு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும்  மனோகராசா பிரதீபன் விசேட சொற்பொழிவு நிகழ்த்தினார்.


அதனைத் தொடர்ந்து தம்பனைக்குளம் அ.த.க பாடசாலை மாணவர்கள் மற்றும் தம்பனைக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப்

பாடசாலை மாணவர்களின் நடனம், பேச்சு ,கவிதை கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.


மேலும் கலை நிகழ்வுகளை சிறப்பாக வழங்கிய மாணவர்கள் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டது டன்

கலந்து கொண்ட அனைவருக்கும் பாரம்பரிய முறைப்படி சிரட்டையில் ஆடிக்கூழ் மற்றும்

கொழுக்கட்டை என்பன வழங்கப்பட்டன.


சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் இந்த நிகழ்வை நெறிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

 








மன்னார் மடு பிரதேசத்தில் சிறப்பாக நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா Reviewed by Author on July 19, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.