மன்னார் மாவட்டத்தில் நடன துறையில் புதிய புரட்சி சாதித்து காட்டிய வங்காலை Dazzling Diamond நடன கல்லூரி மாணவர்கள்
இலங்கையின் பிரபல தொலைக்காட்சியான சிரச தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட ஸ்ரீலங்கன் ஹாட் டெலண்ட் என்கின்ற தேசிய ரீதியில் நடாத்தப்படுகின்ற நடன நிகழ்ச்சியில் மன்னார் வங்காலை கிராமத்தில் இயங்கி வரும் Dazzling Diamond நடன கல்லூரி மாணவர்கள் ஒரு குழு நடனம் உட்பட ஜோடி நடனத்திலும் தெரிவாகி அடுத்த கட்டத்திற்கு முன்னேறி சாதித்து காட்டியுள்ளனர் குறித்த நடன நிகழ்ச்சி ஆனது தேசிய ரீதியில் நடத்தப்படுகின்றது
இதில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் சிங்கள நடன கலைஞர்கள் பங்கு கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட முதல் தேர்வில் தெரிவாகி தேசிய ரீதியில் நடத்தப்படும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி அதிலும் தெரிவு செய்யப்பட்டு இப்பொழுது அடுத்த நிலைக்குDazzling Diamond நடன கல்லூரி மாணவர்களுடையகுழு நடனம் மற்றும் ஒரு ஜோடி நடனம் என்பன தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும் இந்த மாணவர்களை Dazzling Diamond நிறுவனர் அர்ஜுன் லெம்பட் நெறிப்படுத்தி இருந்தார்
இது தொடர்பான நடன காணொளிகள் சிரச தொலைக்காட்சியின் உத்தியோகபூர்வமான வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
Reviewed by Author
on
July 25, 2024
Rating:







No comments:
Post a Comment