முசலி பிரதேச இளைஞர்,யுவதிகளுக்கு காணி தொடர்பாக இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தமர்வு.
இழந்த காணிகளை ஜனநாயக ரீதியில் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை (25) முசலி கோட்ட கல்வி பணிமனை இல் இடம்பெற்றது.
அரச திணைக்களங்கள்,பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை ஜனநாயக ரீதியாக பெற்றுக் கொள்வதற்கு இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் குறித்த கலந்துறையாடல் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலின் போது காணி தொடர்பான ஆவணங்களை சரி பார்ப்பது, தகவல் சேகரிப்பது ,ஆவணங்களை பெற்று கொள்வதற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்துவது தொடர்பிலும் தெளிவூட்டப்பட்டது.
குறித்த நிகழ்வில் மெசிடோ நிறுவன ஊழியர்கள், முசலி இளைஞர் சேவை அதிகாரி உட்பட 40 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
முசலி பிரதேச செயலக பிரிவில் சிலாவத்துறை ,முள்ளிக்குளம் உள்ளடங்களாக 1000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட பொது மக்கள் காணிகளை கடற்படையினர் சுவீகரித் துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
July 25, 2024
Rating:

.jpg)
.jpg)
.jpg)

No comments:
Post a Comment