இலங்கை மழைநீர் சேகரிப்பு அமையத்தால் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான விவாத போட்டி
இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான குடி நீரை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
அந்த வகையில் தற்போது இலங்கையில் வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படும் பிரதேச மக்களுக்கான சுத்தமான குடி நீரை பெற்றுக்கொடுத்தல் எனும் செயற்றிட்டத்தின் கீழ் ருளுயுஐனு இன் அனுசரணையுடன் இயங்கி வருகிறது.
வடமாகாணத்தின் மன்னார் மாவட்டங்களிலிருந்து மழைநீர் சேகரிப்பு தாங்கிகள் மூலம் பயனடைந்த பாடசாலை மாணவர்கள் இவ் விவாத போட்டியில் பங்கு பெற்றி உள்ளனர்.
இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் முதலாவது சுற்றில் பங்குபற்றி இரண்டாவது சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விவாத போட்டி இன்றைய தினம் (25) முருங்கனில் அமைந்துள்ள ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் மழைநீர் சேகரிப்பானது அனர்த்த முகாமைத்துவத்தில் குறிப்பாக வெள்ள மற்றும் வறட்சியின் போது ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க ஒரு சிறந்த தீர்வாக அமையும். /அமையாது/ எனும் தலைப்பில் இடம் பெற்றது.
நிகழ்வில் இலங்கை மழைநீர் சேகரிப்பு ஒன்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த சுற்று போட்டிகளும் இடம் பெறவுள்ள தோடு இரண்டாம் சுற்றில் பங்குபற்றிய ஆறு அணிகளில் மன்/ தலைமன்னார் அ.த.க.பா,மன்/பரிகாரி கண்டல் அ.த.க.பா ,மற்றும் மன்/ கட்டையடம்பன் றோ.க.த.க.பா ஆகிய மூன்று பாடசாலையின் அணிகள் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டன.
இன்று (25)போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Reviewed by Author
on
July 25, 2024
Rating:

.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment