அண்மைய செய்திகள்

recent
-

தேசியப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவனுக்கு கௌரவிப்பு

 2024 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியின் தடைகளப்போட்டிகள் அண்மையில்  கொழும்பு தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றது 


இத்தடைகளப்போட்டியில் 3000m போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்ற மாணவன் மற்றும் ஐந்தாம் எட்டாம் இடங்களைப் பெற்று அகில இலங்கையில் சாதனை படைத்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு வானவில் ஊற்று சிறுவர் கழக ஏற்பாட்டில்  இன்று (28) முத்துஐயன்கட்டு ஜுவநகர் வானவில் ஊற்று சிறுவர் கழக மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது 


தடைகளப்போட்டியில் 3000m இல்  9 நிமிடம் 2 செக்கன்களில் ஓடி முதலாம் இடத்தை பெற்ற ஜெயகாந்தன் விதுசன் 9 நிமிடம் 32 செக்கன்களில் ஓடி 5 ஆம் இடத்தை பெற்ற மாரிமுத்து நிலவன் 9 நிமிடம் 47 செக்கன்களில் ஓடி 8 ஆம் இடத்தைப்பெற்ற சந்திரமோகன் இசைப்பிரியன் ஆகிய மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பதக்கம் அணிவித்து கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்  பரிசில்களும் வழங்கப்பட்டது 


இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், தாய் தமிழ் பேரவை ஸ்தாபகர் ரூபன், தாய் தமிழ் பேரவை முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சீலன், இடதுகரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் இ. பாஸ்கரன்

பயிற்றுவிற்பாளர் பு. ஜெயந்தனன் நன்னீர் மீன்பிடி சங்க தலைவர் கிராம அலுவலர் சமூக செயற்பாட்டாளர்கள் பெற்றோர்கள் வானவில் ஊற்று சிறுவர் கழக அங்கத்தவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்













தேசியப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவனுக்கு கௌரவிப்பு Reviewed by Author on July 29, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.