பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்: முதலிடம் பிடித்த இலங்கை வீராங்கனை
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீற்றர் பேக்ஸ்ட்ரோக் பெண்களுக்கான நீச்சல் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய கங்கா செனவிரத்னே ஆரம்பச் சுற்றில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.
அதற்காக அவர் செலவிட்ட நேரம் 1.26 நிமிடங்கள் என பதிவாகியுள்ளது.
இரண்டாவது இடத்தை மொசாம்பிக்கும், மூன்றாவது இடத்தை துருக்கியும் பெற்றதாக கூறப்படுகிறது.
இருப்பினும், போட்டியை முடித்த நேரத்தின் அடிப்படையில் அரையிறுதிச் சுற்றுக்கு அவரால் தகுதி பெற முடியவில்லை.
ஆரம்ப சுற்றில் ஐந்து போட்டிகளின் கீழ் இந்த போட்டியில் 36 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் கங்கா சேனவிரத்ன இதில் 30வது இடத்தைப் பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டியில் 16 வீராங்கனைகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment