மன்னார் மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரியாக பீ.பிரபானந்தன் நியமனம்.
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆண்டாங்குளம் கிராமத்தில் வசிக்கும் சமூக சேவையாளர் பீ.பிரபானந்தன் திடீர் மரண விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதி மற்றும் சிறைச்சாலைகள் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ வின் முஸ்லிம் விவகாரங்களுக்கான இணைப்பாளர் எஸ்.என்.முஹம்மதின் அவர்களால் இந்த நியமன கடிதம் நேற்று செவ்வாய்க்கிழமை(9) கொழும்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் பிரதேச செயலக பிரிவின் உப அட்டவணையில் காட்டப்பட்டிருக்கும் கிராம அலுவலர் பிரிவுகளுக்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக சமூக சேவையாளர் பீ.பிரபானந்தன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.mannr

No comments:
Post a Comment