ரணில் கடுமையாக தேர்தல் சட்டத்தை மீறுகிறார்:
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் தேர்தல் சட்டத்தை கடுமையாக மீறும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
”ரணில் விக்ரமவிங்ச, தேர்தல் சட்டத்தை கடுமையாக மீறும் வகையில் செயல்படுகிறார். ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில், இரண்டு இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ளார்.
வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதியும் தேர்தல் நடைபெறும் தருணத்தில் இவ்வாறு அமைச்சுப் பதவிகளை வழங்கவில்லை. இவ்வாறு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்ட இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சென்றவர்களாகும்.
தமக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி வழங்கும் கையூட்டே இந்த அமைச்சுப் பதவிகள். உயர் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக எம்.பி பதவிகளை இழந்த ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் மீண்டும் அவர்கள் வகித்த அமைச்சுகளின் ஜனாதிபதி ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதுவும் அமைச்சரவை அந்தஸ்துடன்தான் இந்த ஆலோசகர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் இந்த செயல்பாடுகள் நேரடியாக தேர்தல் சட்டத்தை மீறும் செயல்பாடுகளாகும். இதுகுறித்து எவரும் முறைப்பாடுகளை அளிக்க தேவையில்லை. தேர்தல்கள் ஆணைக்குழு இந்த விடயத்தில் உடனடியாக தலையிட வேண்டும்.“ என்றார்.
Reviewed by Author
on
August 23, 2024
Rating:


No comments:
Post a Comment