கஞ்சிபானை இம்ரானும் ரொடும்பே அமிலவும் கைது
லொகு பெட்டியுடன் கஞ்சிபானை இம்ரான் மற்றும் ரொடும்பே அமில ஆகியோர் ரஷ்யாவிற்கு தப்பிச் சென்றருந்த நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் இதுவரையில் இலங்கை பாதுகாப்பு பிரிவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதன்படி குற்றப் புலனாய்வு திணைக்களம், சர்வதேச பொலிஸாரிடம் இந்த விடயத்தை உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளது.
இம்ரான் மற்றும் ரொடும்பே அமில மாகந்துரே மதுஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட நிலையில், நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தலைமறைவாகினர்.
இவர்கள் அனைவரும் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என பொலிஸார் தெரிவித்தனர்.
Reviewed by Author
on
August 01, 2024
Rating:


No comments:
Post a Comment