அண்மைய செய்திகள்

recent
-

கோழைத்தனமான தாக்குதல்களினால் ஒரு போதும் பாலஸ்தீனத்தின் விடுதலை பாதையினை முடக்க முடியாது.- இஸ்மாயில் ஹனியா படுகொலை மனித உரிமை மீறலாகும் ரிஷாட் பதியுதீன் கண்டனம்

 தமது மண்ணுக்கான உரிமை மீட்பு போராட்டத்தில் நிலைத்து நின்ற பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அரசியல் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை சம்பவமானது மிலேச்ச னத்தின் வெறியர்களின் முகங்களை காட்டுகிறது. இப் படுகொலைகளை மனிதத்துவம் கொண்ட எவராலும் அங்கீகரிக்க முடியாது. 


ஆக்கிரமிப்பினை மட்டும் கொண்டு ஹமாஸ் மக்களையும், சிறுவர்களையும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் என பாராது கொடூரமான முறையில் கொன்றொழிக்கும் இஸ்ரேலின் இந்த செயலை நான் பிரதிநிதித்துவம் செய்யும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆனது வன்மையாக கண்டிக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் தனது அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,


இலங்கை-பலஸ்தீன உறவு என்பது பல ஆண்டுகள் நெருக்கமானது, இந்த உறவானது எம்மில் இருந்து பிரிக்க முடியாத தொன்று என்பதால் தான் நாம் இழப்புக்களின் வேதனையை  உணர்கின்றோம். 


பாலஸ்தீனத்தின் போராட்டம் என்பது உலகளாவிய வல்லரசுகள் கூட நியாயம் கண்டுள்ள நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து கட்டுக்கடங்காது,காட்டுமிராண்டித்தனமாக  மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் அம்மக்களை மேலும் பல இழப்புக்களுக்குள் தள்ளிவருகின்றது.


அப்பட்டமான மனித உரிமை மீறல்களாக இந்த படுகொலை காணப்படுவதாகவும்,  எல்லை மீறும்   இஸ்ரேலின் இந்த மோசமான மனித படுகொலையை நிறுத்த உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டுவதுடன்,இஸ்ரேலின் இத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர்  மர்ஹூம் இஸ்மாயில் ஹனியாவின் மறைவுக்கு எமது  கட்சி ஆழ்ந்த கவலையினை வெளிப்படுத்துகின்றது.




கோழைத்தனமான தாக்குதல்களினால் ஒரு போதும் பாலஸ்தீனத்தின் விடுதலை பாதையினை முடக்க முடியாது.- இஸ்மாயில் ஹனியா படுகொலை மனித உரிமை மீறலாகும் ரிஷாட் பதியுதீன் கண்டனம் Reviewed by Author on August 01, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.