மலேசியாவில் கைது. செய்யப்பட்ட இலங்கை குடும்பம். ...
மலேசியாவில் போலியான முறையான கடவுச் சீட்டைப் பெற முயற்சித்த இலங்கையர் ஒருவரும், அவருக்கு உதவிய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
பினாங்கில் உள்ள குடிவரவுத் திணைக்களத்தில் போலியான ஆவணங்களை சமர்பித்து கடவுச்சீட்டை பெற முயற்சித்துள்ளனர்.
பதின்ம வயது நபருக்கு 10 வயது என்று கூறி கடவுச் சீட்டை பெற முயன்ற நிலையில், அவரின் தாய் போன்று நடித்த பெண்ணும் சிக்கியுள்ளார்.
போலி ஆவணங்கள்
எனினும் அவர்களின் ஆவணங்கள் போலியானவை என்பதை அறிந்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
குறித்த நபர் ஏலவே மலேசியக் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பித்திருந்த போதும், அவருக்கு மலே மொழி தெரியாத காரணத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது
Reviewed by Author
on
August 24, 2024
Rating:


No comments:
Post a Comment