சுதர்ஷினி எம்.பி, சஜித்திற்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இவர் கம்பஹா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நன்மதிப்பு மிக்க அரசியல்வாதியான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் பாரியாராவார்.
பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ள இவர் கடந்த அரசாங்கத்தின் கீழ், ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் மற்றும் கொவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.
பெர்னாண்டோபுள்ளே முன்பு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்தார்.
Reviewed by Author
on
August 11, 2024
Rating:


No comments:
Post a Comment