கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் தீ - விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு
கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் தீப்பிடித்த சம்பவம் குறித்து துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால்சிறிபாடிசில்வா விசாரணைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கொழும்பு துறைமுக அதிகாரசபையின் அதிகாரிகளை விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். கொழும்புதுறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் திடீர்என தீப்பிடித்ததை தொடர்ந்து துறைமுக தீயணைப்பு பிரிவினர் உடனடியாக தீயைஅணைத்துள்ளனர். சிங்கப்பூரிலிருந்து கொழும்புதுறைமுகத்திற்கு வந்த சுவிட்சர்லாந்திற்கு சொந்தமான கப்பலிலேயே தீப்பிடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் தீ - விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு
Reviewed by Author
on
August 11, 2024
Rating:

No comments:
Post a Comment