கனடாவில் காணாமல் போன தமிழர்
கனடாவில் காணாமல் போயுள்ள தமிழரை கண்டுபிடிக்க பீல் (Peel) பிராந்திய பொலிஸார் பொது மக்கள் உதவியை நாடியுள்ளனர்.
64 வயதான யோகராஜா என்பவர் கடந்த 31ஆம் திகதி புதன்கிழமை முதல் பிரம்டன் (Brampton) நகரில் வைத்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஒன்றாரியோ மாகாண உரிமத் தகடு CFAZ 745 கொண்ட 2019 Grey Honda Odyssey வாகனத்தில் இவர் கடைசியாக பயணித்தாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த நபரை அல்லது குறிப்பிட்ட வாகனத்தை கண்டவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த நபர் திட்டமிடப்பட்டு கடத்தப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இவரது தொலைபேசி கடந்த 31ஆம் திகதி மதியம் 12.31 முதல் செயலிழந்து உள்ளதாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment