யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த அவலம் நோயாளரை அச்சுறுத்திய வைத்தியர்கள்
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
பாதிப்பட்டவரான தம்பி ஐயா கிருஷ்ணானந்த் என்ற நபர், யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோது இதனை தெரிவித்தார்.
அத்துடன் ஜனாதிபதி செயலகம், சுகாதார திணைக்களம், பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளும் குறித்த விடயம் தொடர்பில் பதிவுத் தபாலில் மனுவொன்றை கையளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவத்ததிற்காக சென்ற தன்னை அழைத்து என்னுடைய முகநூல் பதிவுகள் தொடர்பில் கேள்வி எழுப்பினாரே தவிர, நோய் நிலைமை தொடர்பில் கருத்து கேட்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
Reviewed by Author
on
August 12, 2024
Rating:


No comments:
Post a Comment