மூன்றாவது முறையாக விருது வெல்லும் சமரி!
ஜூலை மாதத்திற்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீராங்கனையாக, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து தேர்வு செய்யப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இதற்காக இந்திய வீராங்கனைகளான ஸ்மித்ரி மந்தனா மற்றும் ஷபாலி வர்மாவிடம் இருந்து கடும் போட்டி நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் இலங்கை மகளிர் அணி ஆசியக் கிண்ணத்தை முதன்முறையாக வென்றதுடன் அதற்கு சமரி அத்தபத்து பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தார்.
34 வயதான சமரி அத்தபத்து இந்த விருதை வெல்வது இது மூன்றாவது முறையாகும்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஹெய்லி மேத்யூஸ் மூன்று முறையும், அவுஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் நான்கு முறையும் விருதை வென்றுள்ளனர்.
Reviewed by Author
on
August 12, 2024
Rating:


No comments:
Post a Comment