அண்மைய செய்திகள்

  
-

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு: பால் குடிக்க மறுத்ததால் கைகால்களை திருகினேன்- தாய் வாக்குமூலம்

 யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடிப்பதால் , குழந்தையின் கைகால்களை திருகியதாக தாயார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.


குழந்தையின் தாயார், மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸ் விசாரணையில் குழந்தை பால் குடிக்க மறுப்பதால் , கைகள் கால்களை திருகினேன். ஆனால் எனது குழந்தையை நான் கொலை செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.


பொலிஸார் தாயை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


இதேவேளை, குழந்தையின் தந்தையையும் , குழந்தையை பராமரிக்க வீட்டிற்கு வந்து சென்ற பெண்ணொருவரையும் பொலிஸ் காவலில் வைத்து விசரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


குழந்தையின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவை நீதிமன்றில் பாரப்படுத்திய பின்னர் , நீதிமன்ற உத்தரவின் பேரிலையே குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.



யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு: பால் குடிக்க மறுத்ததால் கைகால்களை திருகினேன்- தாய் வாக்குமூலம் Reviewed by Author on August 05, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.