சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்: யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் 114 மாணவிகள் 9ஏ சித்தி
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் 114 மாணவிகள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
அத்துடன் 42 மாணவர்கள் எட்டுப் பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். 32 மாணவர்கள் ஏழு பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு வெளியாகியிருந்த சாதாரண தரப் பரீட்சையில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் 115 மாணவிகள் 9ஏ சித்திகளை பெற்றிருந்தனர்.
கடந்த முறை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி, தமிழ் மொழி மூலமான பெறுபேற்றின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றிருந்தமை சிறப்பம்சமாகும்.
இதனிடையே, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 52 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
தமிழ் மொழி மூலம் 28 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 24 மாணவர்களும் இவ்வாறு ஏ சித்தி பெற்றுள்ளனர்.
அத்துடன் 62 மாணவர்கள் எட்டுப் பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
அதேவேளை, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 32 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
தமிழ் மொழி மூலம் 17 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 15 மாணவர்களும் இவ்வாறு ஏ சித்தி பெற்றுள்ளனர். அத்துடன் 28 மாணவர்கள் எட்டுப் பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 26 மாணவிகள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். மேலும் 19 மாணவிகள் எட்டுப் பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment