மன்னார் முசலியில் சஜித்தை ஆதரித்து ஜளனி பிரேமதாச பரப்புரை.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அவரது மனைவி ஜளனி பிரேமதாச மன்னார் முசலியில் பிரதேச செயலாளர் பிரிவில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த பரப்புரை நிகழ்வானது நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் மன்னார் முசலி பொற்கேணியில் பிரதேசத்திற்கு வருகை தந்து அவர் அங்கு மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் மன்னார் அளக்கட்டு பொற்கேணியில் இடம்பெற்ற பெண்களுக்கான கருத்தரங்கு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன், மக்கள் சக்தியின் அமைப்பாளர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்,உள்ராட்சி மன்ற உறுப்பினர்கள்,பெண்கள் அமைப்புகள் ,பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Reviewed by Author
on
September 13, 2024
Rating:







No comments:
Post a Comment