அண்மைய செய்திகள்

recent
-

ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் பலி

ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் பலி


வவுனியா, ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.


யாழில் இருந்து வவுனியா நோக்கி இன்று (10.09) மாலை சென்ற புகையிரதமானது புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது புகையிரத தண்டவாளத்தில் நடந்து  சென்ற பெண் மீது புகையிரதம் மோதி விபத்துக்குள்ளானது.


இதில், குறித்த பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் சுமார் 35-45 வயது மதிக்கத்தக்கவர் எனவும், இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்த ஓமந்தைப் பொலிசார் 


குறித்த சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜயத்திலக்க அவர்களின் தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்






ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் பலி Reviewed by Author on September 10, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.