இலங்கையில் அதிகரிக்கும் சீன மொழி ஊக்குவிப்பு
இலங்கையில் பல இடங்களில் சீன மொழி ஊக்குவிக்கப்படுவதாகச் சீனாவின் சின்ஹுவா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சீன மொழி பல்வேறு இடங்களில் கற்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலும், ஊவா மாகாணத்தின் சில பாடசாலைகளிலும் இதற்கான பிரத்தியேக வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சீன மொழியைக் கற்பிப்பதற்காக சீனாவிலிருந்து பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் இலங்கையில் தங்கி இருந்து சேவையாற்றுவதாகவும் சின்ஹுவா தெரிவித்துள்ளது.
இலங்கையில் அதிகரிக்கும் சீன மொழி ஊக்குவிப்பு
Reviewed by Author
on
September 10, 2024
Rating:

No comments:
Post a Comment