அண்மைய செய்திகள்

recent
-

மக்களை அலைக்கழிக்கும் காங்கேசந்துறை துறைமுக சுங்கபிரிவு

நாகபட்டினம் காங்கேசன் துறை கப்பல் சேவை தொடர்பில் தொடர்சியாக மக்கள் பல்வேறு விதமான குற்றாச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் காங்கேசந்துறை சுங்கத்தில் ஊழல் செயற்பாடுகள் இடம் பெறுவதுடன் மக்களை திட்டமிட்டு தாமதப்படுத்து செயற்பாடுகளிலும் சுங்க அதிகாரிகள் ஈடுபடுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்

குறிப்பாக காங்கேசந்துறை சுங்கத்தில் இரண்டு கருமபீடங்கள் மாத்திரமே காணப்படுவதாகவும் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளிடம் நீண்ட நேர விசாரனைகள் மேற்கொள்வதாகவும் நபர் ஒருவருக்கு 35 தொடக்கம் 40 நிமிடம் வரை விசாரணை செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கின்றனர்

அடிப்படை வசதிகள் அற்ற அமர்வதற்கு கதிரைகள் கூட அற்ற காத்திருக்கும் பகுதியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் மலசல கூட வசதிகள் கூட ஒழுங்குபடுத்தப்படவில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர்

அதே நேரம் சில பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிப்பதாகவும் வரியில் பாதி அளவிலான தொகைக்கே பற்று சீட்டு வழங்குவதாகவும் மீதி தொகைக்கு பற்றுசீட்டு வழங்குவதில்லை எனவும் பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்

மேலும் இலங்கையில் பழங்களின் விலைகள் அதிகமாக காணப்படுவதால் இதியாவில் இருந்து கொண்டுவரப்படும் சிறிய அளவிலான பழங்களை கூட அதிகாரிகள் அபகரித்து கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்

தொடர்சியாக நாகப்பட்டினம் காங்கேசந்துறை ஊடாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள் வர்தகர்கள் என அனைவரும் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர் என்பதுடன் தொழில்ரீதியாக இந்தியா செல்பவர்களிடம் நேரடியாக சுங்க அதிகாரிகளால் இலஞ்சம் கோரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது



மக்களை அலைக்கழிக்கும் காங்கேசந்துறை துறைமுக சுங்கபிரிவு Reviewed by Author on October 31, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.