அண்மைய செய்திகள்

recent
-

சுவிற்சர்லாந்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்ற முனைவர் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்களின் மாணவி செல்வி ஜீவிதா ஜீவாதாசன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்..

பரதம் தமிழரின் பழம்பெரும் தெய்வீகக்கலை. தமிழரின் நாகரீகம் பல்லாயிரம் ஆண்டு பழமையானது என்பதை பறைசாற்றி நிற்கும் ஒரு ஆதாரக்கலை. 
இக்கலை பாமரமக்களையும் ஈர்த்து உணர்ச்சியடையச் செய்யவல்லது. இதன் காரணமாக உலகில் புலம்பெயர்ந்து பரந்து வாழும் தமிழ் மக்களால் வளர்க்கப்படவேண்டிய கலைகளுள் பரதக்கலை முக்கியத்துவம் வாய்ந்த கலையாக கருதப்படுகின்றது.
அத்தகைய கலையின் மகிமையினை உணர்ந்தவர்களுள் திருக்கோணேஸ்வர நடனாலய ஸ்தாபகர் கலாநிதி திருமதி.மதிவதனி சுதாகரன் அவர்களுடைய மாணவி செல்வி.ஜீவிதா ஜீவாதாசன் அவர்களும் ஒருவர் என்றால் மிகையாகாது. 
செல்வி. ஜீவிதா குரும்பசிட்டி செல்லத்துரை அவர்களின் புதல்வன் திரு.ஜீவதாசன் அவர்கள்  மற்றும் மட்டக்களப்பின் பிரபல வர்த்தகர் புங்குடுதீவு கார்த்திகேசு அன் சன்ஸ் உரிமையாளர் திரு.கார்த்திகேசு அவர்களின் கொள்ளுப்பேத்தியும் 
திரு சண்முகராசா அவர்களின் பேத்தியுமான யசோதா அவர்களதும் ஏகபுத்திரியாவார்.
செல்வி. ஜீவிதா ஜீவதாசனை பொறுத்தவரை அவர் தனது மூன்றரை வயதிலிருந்து நடனக்கலையை முறையாகக் கற்றுத் தேறியதோடு நடனத்துறையில் தரம் ஒன்றிலிருந்து ஆசிரியர் தரம் வரை கற்று “பரதகலாவித்தகர்” பட்டத்தினையும் பெற்றுள்ளார்.  
புலம்பெயர்தேசத்தில் மருத்துவ பீடத்தில் இறுதியாண்டில் கல்விகற்கும் இவர் தன்னுடைய இடையறாத கல்விச்சுமைக்கு மத்தியில் தான் கற்ற பாரம்பரிய கலையையும் விட்டுக்கொடுக்காமல் தன்னை ஒரு சிறந்த நர்த்தகியாக முத்திரை பதிக்கும் நோக்குடன் நடனக்கலையில் சிறந்து விளங்கியதற்கு சான்றுதான் செப்ரம்பர் மாதம் 21ஆம் திகதி சுவிற்சர்லாந்தில் துர்க்காவ் மாநிலத்தில் Pfyn எனும் இடத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது அவருடைய பரதநாட்டிய அரங்கேற்றம்.

பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் என்பன அவற்றில் சில இசைக்கருவிகளாகும். அந்தவகையில் இவ் அரங்கேற்ற நிகழ்வினை நேர்த்தியாக நிகழ்த்தி முடிப்பதற்கு பின்புலமாக இருந்து செயற்பட்ட இசைக்கலைஞர்களில்; நட்டுவாங்கம் 
திருமதி. மதிவதனி சுதாகரன் உட்பட இந்தியாவில் இருந்து வருகை தந்த அணிசேர் கலைஞர்களும் முக்கிய இடத்தைப்பிடித்துள்ளனர். வாய்ப்பாட்டு 
திரு. நந்தகுமார் உன்னிக்கிருஷ்ண், மிருதங்கம் 
திரு. பு.சு. செந்தில்குமார் “B” High Grade Artist of the All India Radio, வயலின் 
திரு. நெய்வேலி Sராதாகிருஷ்ணா (B.com, MA Music, Ph.D), புல்லாங்குழல் 
Dr. சௌந்தர்ராஜன் வினோத்குமார் ஆகியோரும் இளைய கலைஞர்களாக வாய்ப்பாட்டு திருமதி. அக்ஷரா விஜயக்குமார் சுதாகரன், 
நட்டுவாங்கம் 
செல்வி. அபிநயா சுதாகரன் போன்ற கலைஞர்களின் பங்கினையும் இங்கு பதிவு செய்ய வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
இந்நிகழ்வினை சிறப்பாக தொகுத்து வழங்கியவர் பிரான்ஸ் TRT தமிழ் வானொலியின் நிகழ்ச்சித் தொகுப்பாளரான 
திரு. கஜேந்திரன் இராஜேந்திரம் அவர்கள்,
இவர்  நிகழ்வினை தொய்வில்லாமல் பார்வையாளர்களிடம் கொண்டுசேர்த்து கவனத்தை தன்பால் ஈர்த்து வைக்கின்ற காந்தத்தன்மையை உடையவராக களத்தில் செயற்பட்டார் என்றே கூறவேண்டும் இவர்கள் அனைவரினதும் கூட்டுமுயற்சிக்குக் கிடைத்த பரிசே இவ் அரங்கேற்றத்தின் நேர்த்தியான வெளிப்பாடு என்பதை இங்கு கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

மாணவி ஜீவிதா ஜீவதாசன் அவர்களின் நடனக்கலை  குருவான 
திருமதி. மதிவதனி சுதாகரன் மற்றும் பிரதம விருந்தினர் கனடாவின் அருணோதயா நடனக்கலையகத்தின் நிறுவுனர் மற்றும் கலை இயக்குனராக திகழும் 
திருமதி 
கீதா சிவமோகன்(அமெரிக்கா), சிறப்பு விருந்தினர் 
யாழ்.பல்கலைக்கழகத்தில் கலைமாணி மற்றும் நாட்டியக்கலைமணி பட்டங்களை பெற்ற 
திருமதி சிவதர்சனி திருமாமணி ஆகியோர் தத்தமது ஆசியுரையில் மாணவியின் பரதநாட்டிய பயணத்தில் முக்கியமான கட்டத்தை அடைந்ததற்கு மனமார்ந்த பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளதோடு  நன்றியையும் நல்லாசிகளையும் தெரிவித்துள்ளனர்.
புலம்பெயர் தேசத்திலிருந்து 
பல நூற்றுக்கணக்கானோர்  நிகழ்விற்கு சமூகமளித்தனர் அவர்களோடு விருந்தினர்களாக கலைக்கோவில் ஆடல் கலையக நிர்வாகியும் ஆசிரியையுமான
திருமதி நிமலினி ஜெயக்குமார், கனடாவிலிருந்து வருகை தந்த அருணோதயா நடனக்கலையக ஆசிரியை திருமதி சசி அரவிந்த், அவதாரம் நடனாலயத்தின் ஆசிரியை திருமதி டயானி நாகேந்திரம் மற்றும் சர்வாயுதர் நடனாலயத்தின் ஆசிரியை செல்வி
சர்வகாந்தசேனை யோகசேனன் ஆகியோர் காணப்படுகின்றனர்.

ஜீவிதாவின் கலை மற்றும் கலாச்சாரத்தின் மீதுள்ள அர்ப்பணிப்பை நினைவுகூறும் வகையில் அவருக்கு பின்புலமாகவும் வழிகாட்டியாகவும் இருந்து செயற்பட்ட அவரது குரு 
திருமதி. மதிவதனி சுதாகரன் அவர்களை மறக்க முடியாது. பெற்றோருக்கு அடுத்தபடியாக அவரது கலைப்பயணத்தின் திறவுகோல் என்றால் அது இவர்தான்.
நாட்டியத்துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள நடனக்கலைச்செம்மல் ஆடல் அரசி 
திருமதி. மதிவதனி சுதாகரன் அவர்களது நெறிப்படுத்தலில் சுவிற்சர்லாந்தில் இதுவரையில் 44 மாணவிகள் அரங்கேற்றம் செய்துள்ளனர் 36வது அரங்கேற்ற மேடையாக 
செல்வி ஜீவிதா ஜீவாதாசன் அவர்களின் அரங்கேற்றம் அமைந்திருந்தது.

நடனத்துறைக்கு 
திருமதி மதிவதனி சுதாகரன் ஆற்றிவரும்  பணி என்பது அளப்பெரியது.
தான் கற்றுப்பயனடைந்த ஒரு வாழ்வியல் கலையை குறுகிய வட்டத்திற்குள் மட்டுப்படுத்திக்கொள்ளாமல் அதன் உன்னதத்தினை உலகறிய செய்ய பாடுபட்டு வருகின்றார். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்பவர்கள் செல்வி ஜீவிதா போன்ற நடனத் தாரகைகள் மேலைத்தேய கலாச்சார மோகத்தில் சிக்குண்டு தமது கலை கலாச்சாரத்தை மறப்பவர்கள் மத்தியில் தாங்கள் கற்ற கலையை மறவாமல்  தங்களையும் அடையாளப்படுத்தி பெற்றோரையும், ஆசிரியரையும் பெருமைப்படுத்தும் இத்தகைய மாணவர்கள் தான் எதிர்கால இளைஞர்களுக்கு முன்னுதாரணம் என்பது நிதர்சனமான உண்மை.

ஆக்கப் பகிர்வு:-
து.திலக்(கிரி),
யாழ்.உரும்பிராய்/சுவிற்சர்லாந்து.













சுவிற்சர்லாந்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்ற முனைவர் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்களின் மாணவி செல்வி ஜீவிதா ஜீவாதாசன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்.. Reviewed by Author on October 24, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.