பின்தங்கிய கிராமங்களை தர முயர்த்துவதே எனது இலக்கு-ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அ.றொஜன்.
பின்தங்கிய கிராமங்களை தரமுயர்த்தி அக்கிராமங்களில் உள்ளவர்களின் விளையாட்டு , கலை மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை முன்னிலை படுத்துவதே எனது குறிக்கோள் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அ.றொஜன் தெரிவித்துள்ளார்.
மன்னார் பிடாரி குளம் கிராமத்தில் இன்று (28) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,
இக் கிராமம் போன்ற பின்தங்கிய கிராமங்களை தரமுயர்த்திய அவர்களின் விளையாட்டு ,கலை ,கலாச்சாரம் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி அவர்களின் தரத்தை உயர்த்துவது எனது முக்கிய குறிக்கோள்.
எனவே எனது பாராளுமன்ற வெற்றியை தொடர்ந்து இவ்வாறான செயல்கள் ஏனைய கிராமங்களிலும் தொடர்ச்சியாக முன் னெடுக்கவுள்ளேன்.
எனவே இம்முறை எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை நீங்கள் கட்டாயம் வழங்க வேண்டும்.
மாற்றம் ஒன்றே மாறாதது.மாற்றத்தின் மூலம் நீங்கள் பலனை பெற்றுக்கொள்ள முடியும்.எனவே இம்முறை என்னை பாராளுமன்றம் அனுப்பி வையுங்கள் .
No comments:
Post a Comment