நீர்தேக்கத்தில் உயிருக்கு போராடிய இளைஞன்: பாதுகாப்பாக மீட்பு
காசல்ரி நீர்த்தேக்கத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை காப்பாற்றிய சம்பவம் ஒன்று நேற்று பதிவாகியுள்ளது.
காசல்ரீ நீர் தேக்கத்துக்கு அருகாமையில் திடீரென ஒரு இளைஞரின் கூச்சல் சத்தம் கேட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து காசல்ரீ நீர்தேக்கத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியின் முகாமையாளர் ஒருவரே குறித்த இளைஞரை உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வேளையில் காப்பாற்றியுள்ளார்.
பொதுவாகவே காசல்ரீ நீர்தேக்கத்துக்கு குளிப்பதற்காகவும் மீண் பிடிப்பதற்காகவும் நாள்தோரும் பலர் வருவதுண்டு. அதேபோல் குறித்த இளைஞரும் மீன்பிடிக்க வந்திருக்கலாம் என அவரை காப்பாற்றிய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த இளைஞரை நோர்வூட் பொலிஸார் மீட்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதித்தாகவும் குறித்த முனாமையாளர் தெரிவித்தார்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment