சரத் பொன்சேகாவும் தேர்தல் போட்டியில் இல்லை: தீர்மானம் குறித்து அறிவிப்பு
இம்முறை இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திசைக்காட்டி சின்னமான தேசிய மக்கள் சக்தி மற்றும் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட மேற்கொண்ட கலந்துரையாடல்கள் தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரை இறுதியாக மக்கள் அவருக்கு உரிய இடத்தில் வைத்தனர் என்பதை நான் நம்புகிறேன். அது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்கவுடன் சுமார் 10 நிமிட மிக குறுகிய கலந்துரையாடலில் ஈடுபட்டேன். ஜனாதிபதித் தேர்தலில் தம்முடன் இல்லாதவர்களுக்கு வேட்புமனு வழங்குவதை தாம் எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமருடன் கலந்துரையாடினேன். சிலிண்டர் சின்னத்துடன் பயணிக்கும் அரசியல் பயணம் தொடர்பில் அவ்வளவு ஈடுபாடு இருக்கவில்லை. அதனடிப்படையில் தான் போட்டியிடப் போவதில்லை என தீர்மானித்தேன்” என தெரிவித்தார்.
Reviewed by Author
on
October 13, 2024
Rating:


No comments:
Post a Comment