நாட்டில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை
நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகுவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது மனநல மருத்துவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
மனச்சோர்வு மற்றும் பல்வேறு மனநிலை காரணமாக குழந்தைகளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டால், பெற்றோர்கள் உடனடியாக மருத்துவர்களிடம் பரிந்துரை செய்ய வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை மனநல மருத்துவ சங்கத்தின் தலைவரும் மருத்துவருமான சஜீவன அமரசிங்க கருத்து வௌியிடுகையில், தற்கொலை சம்பவங்களில் இலங்கை உலகில் 21 ஆவது இடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இலங்கையில் தற்கொலை வீதம் இன்னும் அதிகமாகவே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
Reviewed by Author
on
October 12, 2024
Rating:


No comments:
Post a Comment