சர்வமத தலைவர்களின் ஆசியுடன் தனது தேர்தல் பரப்புரையை ஆரம்பித்த மன்னாரின் இளம் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன்.
சர்வமத தலைவர்களின் ஆசியுடன் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணியும் சமூக சேவையாளருமான செல்வராஜ் டினேசன் இன்றைய தினம் சனிக்கிழமை(12) தனது தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ளார்.
-மன்னார் மாவட்டத்தின் இளம் சட்டத்தரணியான செல்வரஜா டினேசன் இம்முறை இடம்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக வன்னி மாவட்டத்தில் மன்னாரில் இருந்து போட்டியிடுகின்றார்.
இம்முறை மாற்றம் ஒன்றையும்,இளம் வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என பலரது கோரிக்கைகளுக்கும் அமைவாக சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் இத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
இந்த நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை உள்ளடங்களாக சர்வமத தலைவர்களின் ஆசியுடன் இன்றைய தினம் தனது தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ளார்.
இவருக்கு மன்னார் மாவட்டத்தில் இளைஞர் குழுக்கள் அமோக ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
October 12, 2024
Rating:


No comments:
Post a Comment