அண்மைய செய்திகள்

recent
-

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட சலுகைக் காலம்

 லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு விசேட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

லெபனானின் தற்போதைய போர் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, லெபனானுக்கு வந்த பின்னர் அதே பதிவை புதுப்பிக்காமல் நீண்ட காலமாக பணியில் இருக்கும் இலங்கை பணியாளர்களுக்கு இந்த சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது.

சலுகை காலம் 2024 ஒக்டோபர்  08  முதல் 2025 ஜனவரி 08 வரை அதாவது 03 மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்.

குறித்த காலப்பகுதியில் தூதரகத்திற்கு வந்து  பதிவுகளை விரைவாக மேற்கொள்ள முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்ய வரும் போது பின்வரும் ஆவணங்களை தூதரக அலுவலகத்திற்கு கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

01) செல்லுபடியாகும் விசா மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு (இந்த ஆவணங்கள் கட்டாயமாகும்.)

02) தற்போதைய வேலை ஒப்பந்தம் (Current Employment Contract)  அல்லது தற்போதைய பணியிடத்துடன் தொடர்புடைய வேலை வழங்குநரால் வழங்கப்பட்ட வேலை வாய்ப்பு கடிதம் (Job Offer Letter) 

03) எண் (01) இல் குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் இருந்தும் கூட,
 தற்போதைய வேலைவாய்ப்பு ஒப்பந்தம்   (Current Employment Contract) அல்லது வேலை வழங்குநரால் வழங்கப்பட்ட வேலை வாய்ப்பு கடிதம் (Job Offer Letter)  இல்லாதவர்கள், தூதரகத்தால் வழங்கப்பட்ட சுய-விபர படிவத்தை (Self-Declaration) பூர்த்தி செய்து, அங்கு பதிவு செய்யலாம்.

இந்த பதிவு செயல்முறைக்கு 62 டொலர்கள் (USD 62/-) அரசாங்கக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அதன்படி, குறிப்பாக இந்த யுத்த சூழ்நிலையில், இந்த சிறப்பு சலுகை காலத்தை ஒரு சிறந்த வாய்ப்பாகக் கொண்டு, பணியகத்தில் பதிவுசெய்து, பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிமையுள்ள நலன்புரி மற்றும் காப்பீட்டு சலுகைகளைப் பெற்று, பணியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

தூதரகம் இதற்காக விசேடமாக 13.10.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை திறந்திருக்கும், அன்றைய தினத்தை தொடர்ந்து அடுத்த 03 மாதங்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களும் இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.

மேலதிக விபரங்களுக்கு : 
1. 00961-81685186/00961-81915603
கௌசி  /  குமாரி  - எழுத்தாளர்

2. 00961-79125589
தூதரக அவசர அழைப்பு இலக்கம் 
பெராட்டில் உள்ள இலங்கை தூதரகம் - லெபனான்




லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட சலுகைக் காலம் Reviewed by Author on October 09, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.