அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு கிழக்கு ஆக்கிரமிப்புக்களுக்கு இரண்டு பிக்குகள் தலைமை தாங்குகின்றார்கள்

வடக்கு கிழக்கு ஆக்கிரமிப்புக்களுக்கு இரண்டு பிக்குகள் தலைமை  தாங்குகின்றார்கள் 


இதில் பாணமுரே திலகவன்ச தேரர் திருகோணமலை அரிசிமலை பகுதியிலிருந்து இயங்குகின்றார் 


வடக்கு கிழக்கு பௌத்த சங்கத்தின் தலைவர் என பாணமுரே திலகவன்ச அடையாளம் காணப்படுகின்றார்  


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவின் கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினராகவும் பாணமுரே திலகவன்ச பணியாற்றி  இருந்தார் 


இந்த தேரருக்கு அமைச்சரவை பாதுகாப்பும் (MSD) வழங்கப்பட்டுள்ளது 


ஆயுதங்களையும் கையாண்டு வருகின்றார் 


2010 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையிலிருந்து திருகோணமலையில்  குடியேறிய பாணமுரே திலகவன்ச தேரர் ஆயிரக்கணக்கான காணிகளை அபகரித்து உள்ளார் 


பல நூறு  பௌத்த மத கட்டமைப்புகளை திருகோணமலை எங்கும் நிறுவி இருக்கின்றார் 


புனித பூமி திட்டத்தின் கீழ் பல நூறு ஏக்கர் விவசாய காணிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றார்


இது போதாதென்று தனியார் நிலங்களை ஆக்கிரமித்து  சிங்கள குடியேற்றங்களை செய்து வருகின்றார் 


மறுபுறம் வடக்கில் குருந்தூர்மலை,வெட்டுக்குநாறி மலை, வவுனியா சிங்களகுடியேற்றம் உட்பட்ட ஆக்கிரமிப்புகளுக்கு கல்கமுவ சாந்தபோதி தேரர் தலைமை தாக்குகின்றார் 


2014 ஆம் ஆண்டவில் வன்னியில்  குடியேறிய கல்கமுவ சாந்தபோதி தேரர் 'வடக்கு எங்களின் உரித்து' என்கிற சமூக தள பக்கங்களை இயக்கி வருகின்றார் 


வவுனியா வடக்கு ஆக்கிரமிப்புகளை முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று சிங்கள குடியேற்றங்கள் வரை விரிவாக்கும் நோக்கில் இயங்கி வருகின்றார் 


அதாவது தமிழ் சமூகத்தின் நில தொடர்ச்சியை சிதைத்து வவுனியாவிலிருந்து கொக்கிளாய் முகத்துவாரம் வரையில் தனியான நிர்வாக அலகு கொண்ட சிங்கள குடியேற்றத்தை உருவாக்க முயலுகின்றார்


தண்ணிமுறிப்பு ,குமுளமுனை கிராமத்தை சேர்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான பல வயல் காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது இவர் தடுத்து வருகின்றார் 


உண்மையில் வடக்கு கிழக்கின் பல தமிழ் பகுதிகளில் குடியேற்றப்பட்டு ஆக்கிரமிப்புகளுக்கு  துணை போகும் பல டசின் பிக்குகளுக்கு  இவர்கள் தான் தலைமை தாங்குகின்றார்கள்


பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் இவர்கள் இருவர் மீதான பல்வேறு முறைப்பாடுகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன


குறைந்தபட்ச நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை 


இப்போது ஆட்சி மாறி விட்டது


புதிய ஆட்சியாளர்கள் எல்லோரையும் சமமாக நடத்துவதாக சொல்லுகின்றார்கள்  


ஆனால் நேற்று புல்மோட்டையில் தமிழ் மக்களின் விவசாய  நிலங்களுக்குள்  புகுந்து பாணமுரே திலகவன்ச தேரர் தரப்பினர் மிக மோசமாக தமிழ் விவசாயிகளை அச்சுறுத்தி இருந்தனர் 


இந்த நிமிடம் வரை எந்த நடவடிக்கையும் இல்லை 


இலங்கை சனநாயக அரசியலின் அடிப்படையாக சிங்கள பௌத்த தேசியவாதம் இருக்கின்றது.


சிங்கள பௌத்த அரசியலின் அடிப்படைக் கருத்தியலை கேள்விக்குட்படுத்த   இங்கு வழியில்லை என்பதால் ஆட்சிகள் மாறுகின்ற போதும் அத்துமீறல்கள்  வாக்குறுதிகளை மீறி  தடையின்றி தொடருகின்றன 

யாரோடு நோவது





வடக்கு கிழக்கு ஆக்கிரமிப்புக்களுக்கு இரண்டு பிக்குகள் தலைமை தாங்குகின்றார்கள் Reviewed by Author on October 06, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.