ஹிருணிகா: முடிவை மாற்றினார்
ஐக்கிய மக்கள் சக்தியுடன் முரண்பட்ட அந்தக் கட்சியின் மகளிர் அணியின் தேசிய அமைப்பாளரான ஹிருணிகா பிரேமச்சந்திரவைக் கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ சமரசப்படுத்தியுள்ளார் எனத் தெரியவருகின்றது.
இதன் ஓர் அங்கமாகவே ஹிருணிகாவின் பதவி விலகல் கடிதத்தை கட்சி ஏற்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் மகளிர் அணியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஹிருணிகா பிரேமச்சந்திர அறிவித்திருந்தார். இது தொடர்பான பதவி விலகல் கடிதத்தைக் கட்சியின் பொதுச்செயலாளருக்கு அனுப்பியிருந்தார்.
இந்நிலையிலேயே ஹிருணிகாவை நேரில் அழைத்து பேசி, அவரைக் கட்சித் தலைவர் சமரசப்படுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் பின்னர் ஹிருணிகா பிரேமச்சந்திரவும், கட்சியின் பொதுச்செயலாளரும் இணைந்து கூட்டாக ஊடக சந்திப்பை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
October 20, 2024
Rating:


No comments:
Post a Comment