மன்னார்-நானாட்டானில் இடம் பெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவணி
மன்னார் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவணி இன்றைய தினம்(23) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நடைபவணி ஆனது நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நானாட்டான் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இன்று காலை 9.30 மணியளவில் முருங்கன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டு நானாட்டான் சுற்று வட்டத்தின் வழியாக நானாட்டான் பிரதேச செயலகத்தை சென்றடைந்தது.
இந்த நிகழ்வில் மன்னார் பிரதி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஒஸ்மான் டெனி , நானாட்டான் மடு சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ,நானாட்டான் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், நானாட்டான் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment