சசிகலா இரவிராஜ் மீது சாவகச்சேரியில் தாக்குதல்.: உரசல் காயங்களுடன் மயிரிழையில் உயிர்தப்பினார்.
தென்மராட்சி பாரளுமன்ற வேட்பாளர் சசிகலா இரவிராஜின் வாகனம் மீது கொலைவெறித்தாக்குதல் இன்று மாலை இடம்பெற்றுள்ளது .சிறிய உரசல் காயங்களுடன் மயிரிழையில் உயிர்தப்பினார் .
தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது வீட்டில் இருந்து புறப்படும் போது ..சாவகச்சேரி தமிழரசுக்கிளையின் குழு ஒன்றும் அதன் பெண் ஒருவர் தலைமையில் மீண்டும் தாக்குதல் நிகழ்தப்பட்டுள்ளது .
இத்தகைய தாக்குதல் முன்பும் இடம்பெற்றுள்ளது . இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் இல்லை .குறித்த தொகுதி சட்டத்தரணி ஒருவரிடம் பொலிஸார் கையூட்டு பெற்றுக்கொண்டுள்ளார்களோ என எண்ணத்தோன்றுவதாக சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக தென்மராட்சி இலங்கை தமிழரசுக்கட்சி சாவகச்சேரி கிளைக்கு எதிராக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரிடம் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Author
on
November 06, 2024
Rating:


No comments:
Post a Comment