அண்மைய செய்திகள்

recent
-

நானாட்டான் பிரதேசத்தில் இரு வான்களுக்கு இடையில் காணப்படும் பிரச்சினை-பொன்தீவு கண்டல் கமக்கார அமைப்பு கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க விடம் முறைப்பாடு- கோரிக்கை அடங்கிய மகஜர் கையளிப்பு.

 நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வாழ்க்கை பெற்றான் கண்டலில் இரு குளங்களுக்கு இடையில் காணப்படும் வான் பிரச்சினை குறித்து பாதிக்கப்பட்ட பொன்தீவு கண்டல் கமக்கார அமைப்பு நேற்றைய தினம் வியாழக்கிழமை(28) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு தமது பிரச்சினையை முன் வைத்தனர்.


இதன் போது பெண் தீவு கண்டல் கமக்கார அமைப்பு குறித்த விடயம் குறித்து மகஜர் ஒன்றை  கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமர சிங்கவிடம் கையளித்தனர்.

குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,

குறித்த வான்  இரு கமக்கார அமைப்பிற்கும் சொந்தமானதாக காணப்படுகின்றது.எனினும் குறித்த வான் வாழ்க்கை பெற்றான் கண்டல் கமக்கார அமைப்பினால் பராமரிக்கப்பட்டு வருகிறது.குறித்த வான் புனரமைப்பு செய்யப்பட்ட போது அதற்கான ஒப்பந்தத்தை ஒப்பந்ததாரர் எம்.சந்தியோகு என்பவருக்கு வழங்கி அவரால் நிர்மாணிக்கப்பட்டது.

இவ் வானிற்கு மேல் ஏறக்குறைய 30 ஏக்கர் புலக் காணி உள்ளது.

இக் காணிகள் தாழ்வான பகுதியில் உள்ளதன் காரணத்தினாலும்,பல்வேறு ஒப்பந்த வேலைகள் நீர்ப்பாசன திணைக்களத்தின் ஊடாக செய்வதன் காரணத்தினாலும் குறித்த ஒப்பந்த தாரர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஏற்கனவே இருந்த வானின் அளவை உயர்த்தி தீர்மானித்துள்ளார்.

இது மட்டுமல்லாது நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் அவர்களுக்கு பணம் அல்லது பொருளை இலஞ்சமாக வழங்கி தனக்கு ஏற்றது போல் தீர்மானித்துள்ளார்.

இதனால் மேல் உள்ள பொன் தீவு கண்டல் கிராம வயல் காணிகள்,வீடுகள் யாவும் தண்ணீரில் மூழ்கி காணப்படுகின்றது.இது தொடர்பாக காலம் காலமாக 2021 ஆம் ஆண்டில் இருந்து நீர்ப்பாசன திணைக்களத்திற்கு எங்களால் தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை.எமது முறைப்பாட்டை அவர்கள் ஏற்பதாகவும் இல்லை.

பொண்தீவு கண்டல் குளத்திற்கு முருங்கன்,கன்னாட்டி,பெரும்பரப்பு,சுண்டிக்குழி,பிச்சை குளம் போன்ற குளங்களின் நீர் அனைத்தும் பொன்தீவு கண்டல் குளத்தினூடாக இவ் வானை சென்றடைகின்றது.

இத்தனை குளத்தின் நீர் இவ் வானினுடாகவே செல்வது வழங்கம்.தற்போது இவ்வாறு வான் உயர்த்தப்பட்டு உள்ளமையினால் நீர் வெளியேறுவது மிகவும் குறைவாக உள்ளது.

இதனால் இக்கிராமம் நீரில் மூழ்கும் நிலை காணப்படுகின்றது.இதற்கு முன்னர் முன்னாள் அரசாங்க அதிபரினால் குறித்த வானை திறந்து மூடும் வகையில் அமைக்க அனுமதி வழங்கப்பட்ட போதும், இவ் வான் கொங்கிறீட் வானாக அமைக்கப்பட்டுள்ளது.என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிரதிகள் அரசாங்க அதிபர்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.





நானாட்டான் பிரதேசத்தில் இரு வான்களுக்கு இடையில் காணப்படும் பிரச்சினை-பொன்தீவு கண்டல் கமக்கார அமைப்பு கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க விடம் முறைப்பாடு- கோரிக்கை அடங்கிய மகஜர் கையளிப்பு. Reviewed by Author on November 29, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.