மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்தது-தற்காலிக நலன் புரி நிலையத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகர.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இன்று புதன் (27) காலை வரை 15 ஆயிரத்து 205 குடும்பங்களைச் சேர்ந்த 52 ஆயிரத்து 487 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் 1240 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 128 நபர்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 43 தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகர தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதன் போது பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் உள்ளடங்களாக உரிய திணைக்கள அதிகாரிகளும் சென்றிருந்தனர்.(
Reviewed by Author
on
November 27, 2024
Rating:





No comments:
Post a Comment