அண்மைய செய்திகள்

recent
-

அனுர அரசு தனக்கு ஏற்றது போல் சட்டங்களை மாற்றும் - மணிவண்ணன்

 ஒற்றுமையாக இருக்காவிட்டால் தமிழர் தரப்பு நிச்சயமாக இழக்கும் என மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும், யாழ். மாநகர சபை முன்னாள் மேஜருமான வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று(17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இடதுசாரி கட்சிகளுக்கு ஒரு பண்பு உலகம் முழுவதும் இருக்கிறது. அவர்கள் சட்டங்களை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி ஆட்சியில் நீண்ட நாட்களுக்கு அகற்றப்பட முடியாதவர்களாக இருக்கும் பல வருடங்களாக இருக்கிறது.

வரலாற்று வெற்றியை பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி தனக்கு ஏற்றது போல் சட்டங்களை மாற்றும், அரசியலமைப்பை மாற்றும், நாங்கள் வடக்கையும் கிழக்கையும் பறிக்கொடுத்து விட்டு எங்கள் மீது திணிக்கப்படும் திட்டங்களை ஏற்றுக்கொள்ளும் நபராக மாறிவிடப்போகிறோம்.

நாங்கள் ஒற்றுமையாக இருக்காவிட்டால் விரைவில் நடக்கவுள்ள மாகாண சபை தேர்தல், உள்ளுராட்சி தேர்தலையும் தமிழர் தரப்பு நிச்சயமாக இழக்கும் என தெரிவித்தார்.







-

அனுர அரசு தனக்கு ஏற்றது போல் சட்டங்களை மாற்றும் - மணிவண்ணன் Reviewed by Author on November 18, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.