அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு சிறைத்தண்டனை
அவுஸ்திரேலியாவில் தனது பிள்ளைகளின் முன்னால் மனைவியை கோடரியால் தாக்கி கொன்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 37 வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
47 வயதுடைய தினுஷ் குரேரா என்ற நபருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர கொலையின் விபரங்கள் விக்டோரியா மாநில உயர் நீதிமன்றத்தில் நேற்று விவரிக்கப்பட்டன.
30 ஆண்டுகளுக்குப் பிறகே தினுஷ் குரேராவுக்கான மன்னிப்பு குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி அமண்டா ஃபாக்ஸ் கூறியுள்ளார்.
சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு, குரேரா தனது மனைவி நெலோமி பெரேராவை கோடரியால் தாக்கி கொலை செய்திருந்தார்.
அப்போது கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 43 வயதாகும்.
மேலும் அவர், கணவரை பிரிந்து செல்ல தயாராகி இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரியவந்தது.
Reviewed by Author
on
December 19, 2024
Rating:


No comments:
Post a Comment