யாழில் மர்ம காய்ச்சலால் உயிரிழந்த நால்வர் விசாரணைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்தமை தொடர்பில் காரணத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழில் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட நால்வர் டுயிரிழந்துள்ளமை மக்கள் மாத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
48 மணித்தியாலங்களுக்கு மேல் காய்ச்சல்
இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் பேரானந்த ராஜா,
இதய அறைகளில் இரத்த கசிவு ஏற்பட்டுக் குறித்த மரணங்கள் சம்பவித்துள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன் உயிரிழந்தவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன் அதன் அறிக்கைகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் அவர்கள் உயிரிழந்தமைக்கான நோய் காரணியைக் கண்டறிய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் 48 மணித்தியாலங்களுக்கு மேல் காய்ச்சல் நிலவுமாயின் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் செல்லுமாறும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் பேரானந்த ராஜா தெரிவித்துள்ளார்
 Reviewed by Author
        on 
        
December 11, 2024
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
December 11, 2024
 
        Rating: 

 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment