பிரான்ஸ்க்கு பயணம் மேற்கொண்ட இலங்கை பெண் விமானத்திலேயே மரணம்
டோஹாவில் இருந்து பிரான்ஸின் பாரிஸ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த மேற்படி பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
முன் அறிவிப்புகளின்படி, மருத்துவக் குழுக்களும் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டன, ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸில் தங்கியிருந்த 81 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எர்பிலில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இது தொடர்பாக பிரான்ஸ் பிரஜையான அவரது மகனுக்குத் தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளது.
உடலை பிரான்ஸ்க்கு கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Author
on
December 27, 2024
Rating:


No comments:
Post a Comment