அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையின் பிரபல பாடசாலைகளில் அதிபர்கள் இல்லை - வெளிவந்திருக்கும் தகவல்

 கொழும்பில் ரோயல் பாடசாலை உட்பட ஏழு பாடசாலைகள் தற்போது அதிபர்கள் இன்றி இயங்குவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


இதனடிப்படையில், தேவி பாலிகா, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மொரட்டுவை, செயின்ட் பால்ஸ், இந்துக் கல்லூரி, இசிபதன கல்லூரி, லும்பினி மற்றும் பிலியந்தலை எம்.எம்.வி ஆகியவை கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பாடசாலைகளிலும் அதிபர்கள் இன்றி இயங்கி வருவதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


மேலும், நாடளாவிய ரீதியில் 46 பாடசாலைகளில் அதிபர்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.


பண்டாரநாயக்க MW கம்பஹா, சங்கமித்தா கல்லூரி, தர்மசோகா, தேவானந்தா வித்தியாலயம், புனித தோமஸ் சிலாபம், ஜோசப் வாஸ் கல்லூரி, ராஜபக்ச வித்தியாலம் வீரகெட்டிய, அநுராதபுரம் MMV மற்றும் பல பாடசாலைகளுக்கு உரிய அதிபர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.


இதேவேளை, வெற்றிடங்களை நிரப்ப 2024 டிசம்பர் 31க்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




இலங்கையின் பிரபல பாடசாலைகளில் அதிபர்கள் இல்லை - வெளிவந்திருக்கும் தகவல் Reviewed by Author on December 27, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.