மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வர்த்தக சந்தை
மன்னார் மாவட்ட வர்த்தக சந்தையும்,கண்காட்சியும் இன்றைய தினம் புதன்கிழமை (11) காலை 9.30 மணியளவில் மன்னார் நகர பிரதேச செயலக முன்றலில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டு வர்த்தக சந்தை மற்றும் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.
உதவி மாவட்ட செயலாளர் பரந்தாமன் , மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் உற்பட அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.
குறித்த வர்த்தக சந்தை,மற்றும் கண்காட்சியில் உள்ளூர் சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதோடு,மலிவு விற்பனையும் இடம் பெற்றது
Reviewed by Author
on
December 11, 2024
Rating:


No comments:
Post a Comment