கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரித்தானிய குடியுரிமை பெற்ற தமிழர் கைது
பிரித்தானியாவிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணம் வசூலித்ததாக கூறப்படும் இலங்கைத் தமிழர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு (Colombo) நீதிவான் நீதிமன்றில் கொழும்பு வடக்கு குற்றப் பிரிவினரால் பெறப்பட்ட பயணத் தடை உத்தரவின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோதே விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 2009ஆம் ஆண்டு இலங்கையை விட்டு சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்ற கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.
குறித்த சந்தேக நபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Author
on
December 02, 2024
Rating:


No comments:
Post a Comment