மன்னாரிலும் பொங்கல் கொண்டாட்டத்திற்கு தயாராகும் மக்கள்
உலகம் முழுவது உள்ள தமிழர்கள் நாளைய தினம் பொங்கலை கொண்டாட உள்ள நிலையில் மன்னார் மாவட்டத்திலும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கான பொருட்கொள்வனவில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்
குறிப்பாக நாளையதினம் பொங்கல் கொண்டாட்டங்களை மேற்கொள்வதற்கான உணவு பொருட்கள் பானை கரும்பு உள்ளடங்கலான பொருட்களை மக்கள் ஆர்வத்தோடு கொள்வனவு செய்வதை நகர் பகுதியில் அவதானிக்க கூடியதாக உள்ளது
கடந்த சில தினங்களாக மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற போதிலும் மக்கள் தை திருநாளை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
மன்னாரிலும் பொங்கல் கொண்டாட்டத்திற்கு தயாராகும் மக்கள்
Reviewed by Author
on
January 13, 2025
Rating:

No comments:
Post a Comment