ரமழான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்
புனித ரமழான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை (2) ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்கள பிரதிநிதி மற்றும் உலமாக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது நாட்டின் எப்பிரதேசங்களிலும் ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதார பூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை.
எனவே ஷஹ்பான் மாதத்தை 30ஆக பூரணப்படுத்தி ஞாயிற்றுக்கிழமை (2) புனித நோன்பு ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
Reviewed by Vijithan
on
February 28, 2025
Rating:


No comments:
Post a Comment